KASYAPA SHILPA SASTRA
காசியப சில்ப சாஸ்திரம்
1. பூபரீஷா
2.திக்பரிச்சேதனம்
2.திக்பரிச்சேதனம்
3. வாஸ்து பலி
4. ஆத்யேஷ்டிகை (முதலாவது கல் நாட்டும் விதி )
5.பிரதமேஷ்டகா விதி
6. உபபீட விதானம்
7.அதிஷ்டான லக்ஷணம்
8. நாள பிரதிஷ்டா விதி
9. பாதவர்கம் (ஸ்தம்ப லக்ஷணம் )
10.போதிகா லக்ஷணம்
https://www.indiamart.com/srinidhi-temple-architects/
1. பூபரீஷா விதி
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு முழம் அகலம், ஒரு முழம் நீளம் ஒரு முழம் ஆழத்திற்கு, பூமியைத் தோண்டி, மண்ணை எடுக்க வேண்டும் . பிறகு , தோண்டி எடுத்த மண்ணை அந்தப்பள்ளத்தில் தள்ளி நிரப்ப வேண்டும் . அப்பொழுது, தோண்டி எடுத்த மண் மீதமிருந்தால், அந்த பூமியானது உத்தமமான பூமியாகும். குழிநிரம்பி, மண் மீதமில்லாமல் சமமாக இருந்தால், அது மத்திமமான பூயாகும். அந்தக்குழி நிரம்புவதற்குப் போதுமான மண் இல்லாமலிருந்தால் , அது அதம பூமியாகும்.
உத்தமமான பூமியையே, சிறந்ததாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் , மத்திம பூமியானது மத்திமமாகும் . அதம பூமியை ஒதுக்கிவிடவேண்டும் .
பூமியானது , வெளுப்பு, சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்று முறையே, நான்கு விதமாகும். இந்த நான்கு விதமான பூமியும், முறையே
பிராம்ஹணாதி ஜாதியினருக்கு சிறந்ததாகும் .
முதலில், பூதங்கள், பிரேதங்கள் , பைசாசங்கள், இவர்களுக்கும் , (வன) தேவதைகளுக்கும் , பலி கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு , அஸ்திர மந்திரத்தினால் அவைகளை, அந்த இடத்திலிருந்து , உச்சாடனம் செய்யவேண்டும் , (அந்த இடத்தை விட்டுச் செல்லும்படி செய்யவேண்டும் .) பிறகு பூகர்ஷணம் செய்ய ( அந்த பூமியை உழுவதற்கு) துவங்க வேண்டும்.
பூமியானது, வெளுப்பு, சிவப்பு , மஞ்சள், கருப்பு என்று நான்கு விதமாகும். இவைகள் முறையே, நான்கு ஜாதியினருக்கும் , தகுதியுள்ளதாகும் ..
கிழக்கு முகமாகவோ , வடக்கு முகமாகவோ உழவேண்டும். அவ்விடத்திலுள்ள புல் பூண்டுகளை எடுத்துவிட்டு அந்த பூமியில் , எள்ளு, கடுகு,, பயிறு , இவைகளை விதைக்க வேண்டும் .
மூன்று நாட்களில் முளைப்பது உத்தமமாகும் . நான்கு நாட்களில்
முளைப்பது அத்தமமாகும். (மூன்று நாட்களில், விதைத்த விதைகளில் முளை கண்டால் , அது உத்தமமான பூமியாகும் , நான்கு நாட்களில் முளை கண்டால் அது மத்திம பூமியாகும். ஐந்து நாட்களில் முளை கண்டால் அது அதம பூமியாகும், என்பது பொருள் ) எனவே அதமமான பூமியை விலகிவிட வேண்டும்.
பிறகு அதில் திக்பரிச்சேதனம் செய்யவேண்டும் .

திக்பரிச்சேதனம்
திக்கை நிச்சயம் செய்வதற்கு சங்கானது பதினாறு 16 அங்குலம் நீளமுள்ளதாக இருக்க வேண்டும் . அதன் சுற்றளவானது , அதற்கு சமமாக இருக்க வேண்டும் . அதன் நுணியின் விசாலமானது , அடியின் விசாலத்தில் எட்டில் ஓர் பாகம் குறைவாக இருக்க வேண்டும்,
சங்குவை வட்டமாக இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். சங்குவை செய்வதற்கான மரமானது, நல்ல அழுத்தமுள்ளதாக (உறுதியுள்ளதாக) இருக்க வேண்டும் . சங்குவை வைக்க வேண்டிய இடத்தில், சங்குவின் அளவைப்போல் இரண்டு பங்கு அளவுடையதாக
மண்டலத்தை (வட்டத்தை) வரைந்து கொள்ளவேண்டும்.
அந்த வட்டத்தின் நடுவில், நான்கு பக்கங்களும் சமமாக இருக்கும்படி , சங்குவை வைக்கவேண்டும்.
முன் பகல் , பின்பகல்களில், சங்குவின் நிழலானது வட்டத்தில் விழும் பொழுது, அந்த நிழலின் உச்சியின் நடுவைத் தெரிந்து கொண்டு , (அந்த இடத்தில் அடையாளம் செய்து கொள்ள வேண்டும் ) இவ்விதம், காலையிலும் , மாலையிலும், புள்ளிகளை வைக்க வேண்டும் . அந்த இரண்டு புள்ளிகளை வைக்க வேண்டும் . அந்த இரண்டு புள்ளிகளின் மத்தியில் நூல் பிடித்து கொட்டிட்டுக் கொள்ள வேண்டும் . இது, கிழக்கு திக்கு , மேற்கு திக்குகளை குறிப்புடுகின்ற ஸுத்திரமாகும்.
இந்த இரண்டு புள்ளிகளின் இடைவெளியை (மத்தியத்தை) தெரிந்து கொள்ள வேண்டும் , அது சபரத்தின் (மீனுடைய) தலையும் வாலுமாகும் . இரண்டு பக்கங்களிலும், மத்தியில் இரண்டு புள்ளிகளை வைத்துக்கொண்டு இரண்டு புள்ளிகளின் மத்தியில் , முன்பு போலவே சூத்திரபாகம் செய்யவேண்டும். இது தெற்கு திக்கு வடக்கு திக்குகளை குறிப்பிடும் சூத்திரமாகும்.
அதன் பிறகு, பிரசாதத்தை ஆழமாகத் தோண்ட வேண்டும் .
பிரஸாதத்தை என்பத்தொன்று பதங்களாகச் செய்து , அந்த பதங்களில் வாஸ்து தேவதைகளைச் சுருக்கமாக பூஜிக்கவேண்டும். அங்கு , மத்தியிலோ, வடக்குப்பக்கத்திலோ, அவ்விதமே வாஸ்து ஹோமம் செய்யவேண்டும். வாஸ்து ஹோமம் செய்யாவிட்டால் அந்த வாஸ்துவானது நாசமடையும் என்று சாஸ்திரம் கூறுகிறது .

பிராஸாத வாஸ்து லக்ஷணம்
தேவர்கள் யாவரும், வாஸ்து புருஷனை, இருப்பது கயிறுகளினாலே கட்டி , அவனை தலைகுப்புற பூமியை நோக்கி தள்ளி, மூச்சு விடமுடியாமல் மூக்கையும் பற்றி, அவன் மேலே நின்றார்கள்.
தேவர்கள் வாஸ்து மூர்த்தியை இவ்விதமாகக்கட்டி குப்புறத் தள்ளினார்கள் . தேவாஸுர தேவாஸுர யுத்தம் நடக்காமலிருக்கும்படி அப்படி செய்தார்கள் . மஹாதபஸ்வியான அந்த உக்கிரனல்லவா அஸுரர்களின் அந்தகாரியத்தை செய்து வந்தான். தேவர்களுடன் போர் புரியும்படி , அஸுரர்களை அவன் தூண்டினான் .
ஸகல தேவர்களினாலேயும் , ஸகல ஆயுதங்களினாலேயும் , அவனை வதைக்க முடியவில்லை. ஆகையால் தேவர்கள் யாவரும் ஓன்று கூடி அந்த பூதத்தை, இருபது 20 கயிறுகளினாலே கட்டி, அதோமுகமாக தள்ளி, ( எழுந்திருக்க முடியாமல் அவனைப் பிடித்து ) தடுத்துக் கோண்டிருந்தார்கள். அவ்விதம் செய்யப்பட்டவனே, வாஸ்து புருசன் ஆவான் , அவனே வாஸ்து மூர்த்தி என்று கூறப்படுகிறான் .(தொடரும்)