Friday, 6 October 2017

KASYAPA SHILPA SASTRA

            


             KASYAPA SHILPA SASTRA

            காசியப  சில்ப  சாஸ்திரம்

       1.  பூபரீஷா
          2.திக்பரிச்சேதனம் 
          3. வாஸ்து பலி 
          4. ஆத்யேஷ்டிகை (முதலாவது கல்  நாட்டும் விதி ) 
          5.பிரதமேஷ்டகா  விதி 
          6. உபபீட விதானம் 
          7.அதிஷ்டான  லக்ஷணம் 
          8. நாள    பிரதிஷ்டா விதி 
          9. பாதவர்கம் (ஸ்தம்ப லக்ஷணம் )
         10.போதிகா   லக்ஷணம்  
https://www.indiamart.com/srinidhi-temple-architects/

              1.  பூபரீஷா    விதி 


                    தேர்ந்தெடுக்கப்பட்ட  இடத்தில்   ஒரு  முழம்   அகலம், ஒரு முழம்  நீளம்  ஒரு  முழம்  ஆழத்திற்கு,   பூமியைத்  தோண்டி, மண்ணை  எடுக்க வேண்டும் . பிறகு ,  தோண்டி  எடுத்த மண்ணை அந்தப்பள்ளத்தில்  தள்ளி  நிரப்ப வேண்டும் . அப்பொழுது, தோண்டி  எடுத்த மண் மீதமிருந்தால்,  அந்த பூமியானது  உத்தமமான  பூமியாகும்.  குழிநிரம்பி, மண்  மீதமில்லாமல்  சமமாக  இருந்தால்,  அது  மத்திமமான  பூயாகும். அந்தக்குழி   நிரம்புவதற்குப்  போதுமான  மண்  இல்லாமலிருந்தால் , அது அதம பூமியாகும்.
     
          உத்தமமான  பூமியையே, சிறந்ததாகத்  தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் , மத்திம பூமியானது மத்திமமாகும் . அதம பூமியை ஒதுக்கிவிடவேண்டும் .

                     பூமியானது , வெளுப்பு, சிவப்பு, மஞ்சள், கருப்பு,  என்று  முறையே,  நான்கு  விதமாகும்.  இந்த நான்கு விதமான பூமியும்,  முறையே
பிராம்ஹணாதி      ஜாதியினருக்கு  சிறந்ததாகும் .

                    முதலில்,  பூதங்கள், பிரேதங்கள் , பைசாசங்கள், இவர்களுக்கும் , (வன)  தேவதைகளுக்கும் , பலி   கொடுக்க  வேண்டும்.
  அதன் பிறகு , அஸ்திர  மந்திரத்தினால் அவைகளை, அந்த இடத்திலிருந்து , உச்சாடனம் செய்யவேண்டும் , (அந்த இடத்தை விட்டுச்  செல்லும்படி செய்யவேண்டும் .) பிறகு பூகர்ஷணம் செய்ய ( அந்த பூமியை  உழுவதற்கு) துவங்க வேண்டும்.
      பூமியானது, வெளுப்பு, சிவப்பு , மஞ்சள், கருப்பு  என்று  நான்கு விதமாகும்.  இவைகள் முறையே, நான்கு ஜாதியினருக்கும் , தகுதியுள்ளதாகும் ..

   கிழக்கு  முகமாகவோ , வடக்கு முகமாகவோ  உழவேண்டும். அவ்விடத்திலுள்ள  புல்  பூண்டுகளை  எடுத்துவிட்டு  அந்த பூமியில் , எள்ளு, கடுகு,, பயிறு , இவைகளை  விதைக்க வேண்டும் .
              மூன்று    நாட்களில்  முளைப்பது  உத்தமமாகும் . நான்கு நாட்களில்
முளைப்பது   அத்தமமாகும். (மூன்று   நாட்களில்,  விதைத்த  விதைகளில் முளை  கண்டால் , அது  உத்தமமான   பூமியாகும் , நான்கு நாட்களில்  முளை கண்டால்  அது  மத்திம  பூமியாகும். ஐந்து   நாட்களில்  முளை கண்டால்  அது  அதம   பூமியாகும்,  என்பது பொருள் )  எனவே அதமமான  பூமியை  விலகிவிட வேண்டும்.
   பிறகு அதில்  திக்பரிச்சேதனம்  செய்யவேண்டும்  .
https://www.indiamart.com/srinidhi-temple-architects/
                                         திக்பரிச்சேதனம்
                திக்கை  நிச்சயம்  செய்வதற்கு    சங்கானது   பதினாறு 16 அங்குலம்  நீளமுள்ளதாக  இருக்க வேண்டும் . அதன்  சுற்றளவானது ,  அதற்கு  சமமாக  இருக்க வேண்டும் .  அதன்  நுணியின்    விசாலமானது , அடியின்   விசாலத்தில்    எட்டில்  ஓர் பாகம்  குறைவாக   இருக்க  வேண்டும்,
          சங்குவை     வட்டமாக  இருக்கும்படி     செய்து   கொள்ள வேண்டும்.  சங்குவை  செய்வதற்கான   மரமானது,  நல்ல  அழுத்தமுள்ளதாக   (உறுதியுள்ளதாக)  இருக்க   வேண்டும் .  சங்குவை   வைக்க  வேண்டிய  இடத்தில்,     சங்குவின்   அளவைப்போல்   இரண்டு பங்கு   அளவுடையதாக
  மண்டலத்தை  (வட்டத்தை) வரைந்து  கொள்ளவேண்டும்.
          அந்த  வட்டத்தின்  நடுவில்,  நான்கு  பக்கங்களும்   சமமாக  இருக்கும்படி ,  சங்குவை   வைக்கவேண்டும். 
                முன்  பகல் ,  பின்பகல்களில்,   சங்குவின்  நிழலானது  வட்டத்தில்  விழும் பொழுது,  அந்த  நிழலின்  உச்சியின்  நடுவைத்   தெரிந்து  கொண்டு , (அந்த  இடத்தில்   அடையாளம்  செய்து  கொள்ள வேண்டும் ) இவ்விதம்,  காலையிலும் ,  மாலையிலும், புள்ளிகளை   வைக்க வேண்டும் .  அந்த  இரண்டு  புள்ளிகளை   வைக்க வேண்டும் .  அந்த  இரண்டு  புள்ளிகளின்   மத்தியில்   நூல் பிடித்து   கொட்டிட்டுக்    கொள்ள  வேண்டும் .  இது, கிழக்கு திக்கு ,  மேற்கு  திக்குகளை    குறிப்புடுகின்ற   ஸுத்திரமாகும்.

                          இந்த  இரண்டு  புள்ளிகளின்   இடைவெளியை  (மத்தியத்தை)  தெரிந்து  கொள்ள வேண்டும் ,  அது சபரத்தின்   (மீனுடைய)   தலையும் வாலுமாகும் . இரண்டு  பக்கங்களிலும்,  மத்தியில்   இரண்டு  புள்ளிகளை    வைத்துக்கொண்டு     இரண்டு  புள்ளிகளின் மத்தியில் , முன்பு   போலவே  சூத்திரபாகம்  செய்யவேண்டும். இது  தெற்கு திக்கு வடக்கு  திக்குகளை   குறிப்பிடும்  சூத்திரமாகும்.
           அதன்  பிறகு,  பிரசாதத்தை   ஆழமாகத்   தோண்ட வேண்டும் .
 பிரஸாதத்தை    என்பத்தொன்று  பதங்களாகச்   செய்து , அந்த  பதங்களில்  வாஸ்து  தேவதைகளைச்   சுருக்கமாக  பூஜிக்கவேண்டும். அங்கு , மத்தியிலோ, வடக்குப்பக்கத்திலோ,  அவ்விதமே  வாஸ்து  ஹோமம் செய்யவேண்டும்.  வாஸ்து  ஹோமம்  செய்யாவிட்டால்  அந்த  வாஸ்துவானது  நாசமடையும் என்று   சாஸ்திரம் கூறுகிறது .                  
https://www.indiamart.com/srinidhi-temple-architects/
                 பிராஸாத  வாஸ்து  லக்ஷணம்  

                           தேவர்கள் யாவரும்,    வாஸ்து  புருஷனை,  இருப்பது  கயிறுகளினாலே   கட்டி , அவனை தலைகுப்புற   பூமியை  நோக்கி தள்ளி, மூச்சு  விடமுடியாமல் மூக்கையும் பற்றி, அவன்  மேலே  நின்றார்கள்.

               தேவர்கள்  வாஸ்து  மூர்த்தியை இவ்விதமாகக்கட்டி     குப்புறத்  தள்ளினார்கள் . தேவாஸுர  தேவாஸுர    யுத்தம்  நடக்காமலிருக்கும்படி  அப்படி செய்தார்கள் .  மஹாதபஸ்வியான   அந்த  உக்கிரனல்லவா  அஸுரர்களின்   அந்தகாரியத்தை  செய்து வந்தான்.  தேவர்களுடன்  போர் புரியும்படி ,  அஸுரர்களை   அவன்  தூண்டினான் .
     
                  ஸகல   தேவர்களினாலேயும் ,  ஸகல  ஆயுதங்களினாலேயும் , அவனை  வதைக்க  முடியவில்லை.  ஆகையால்   தேவர்கள்  யாவரும்  ஓன்று கூடி  அந்த  பூதத்தை, இருபது   20  கயிறுகளினாலே கட்டி, அதோமுகமாக  தள்ளி,  ( எழுந்திருக்க   முடியாமல்    அவனைப்     பிடித்து )      தடுத்துக்                   கோண்டிருந்தார்கள்.   அவ்விதம்  செய்யப்பட்டவனே,  வாஸ்து  புருசன்   ஆவான் ,  அவனே  வாஸ்து மூர்த்தி  என்று  கூறப்படுகிறான் .(தொடரும்)       
































No comments:

Post a Comment